’ஸ்கெட்ச்’ படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!

‘2.0’ மற்றும் ‘காலா’ என்று இரண்டு பட பணிகளில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், அரசியல் கட்சி வேலையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். சக்கரம் போல சுழன்றாலும், அவ்வபோது தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்து, அப்படக்குழுவினரை வாழ்த்த தவறுவதில்லை.
சமீபத்தில் ‘அருவி’ படத்தை பார்த்துவிட்டு, அப்படக்குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த், நேற்று இரவும் விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தை பார்த்தார்.
படத்தை பார்த்தவர், ”படத்தின் கடைசி 30 நிமிடங்கள் எக்ஸலண்டாக இருக்கிறது. எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ் மற்றும் அதில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜ் சிறப்பாக இருக்கிறது. மேக்கிங்கும் நன்றாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.