ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்! - வைரலாகும் ஹாட் புகைப்படம்

கொரோனா பாதிப்பால் ஏழைகள் பலர் உணவு இன்றி தவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் ஏழை எளியோருக்கும், மருத்துவர், காவலர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலரோ கோரோனா ஊரடங்கால் வீட்டில் இருப்பதோடு, தினமும் எதாவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள வெளியிட்டு மக்களை கடுப்பேற்றி வருகிறார்கள்.
அதாவது, விழிப்புணர்வு என்ற பெயரில் சில இம்சை வீடியோக்களை வெளியிடும் நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு புறம் இருக்க, சில நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இப்படி வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஒரு சில ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், ”இந்த நேரத்தில் இப்படி ஒரு புகைப்படம் தேவையா? என்று பலர் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் பிகினி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வித்தியாசமான பிகினி உடையில், படு கவர்ச்சியாக ரகுல் ப்ரீத் சிங் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம், புதிதா அல்லது பழைசா என்பது தெரியவில்லை. இருப்பினும் தற்போது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,