Nov 28, 2019 05:25 AM

ரோஜாவுக்கு வந்த புது வாய்ப்பு! - அதிர்ச்சியில் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள்

ரோஜாவுக்கு வந்த புது வாய்ப்பு! - அதிர்ச்சியில் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரோஜா, தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துக் கொண்டவர், நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

 

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர அரசியலில் செயல்பட்ட ரோஜா, பிறகு அக்கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்தார்.

 

தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்ப்பார்த்த பதவி கிடைக்கவில்லை என்பதால் அவர் சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அரசியலோடு சினிமாவிலும் நடிக்க முடிவு செய்திருக்கும் ரோஜா, அதற்காக கதை கேட்டு வருவதாகவும், பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவர் வில்லியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணாவின் படத்தில் ரோஜா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

 

Actor Balakrishna

 

ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர் ரோஜாவை அணுகி, வில்லியாக நடிக்க வேண்டும், என்று கேட்டிருப்பதாக மட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரோஜா சம்மதம் சொல்வாரா அல்லது மறுப்பு தெரிவிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.