Dec 29, 2020 07:21 AM

பிக் பாஸ் அனிதா சம்பத் வீட்டில் நடந்த சோகம்!

பிக் பாஸ் அனிதா சம்பத் வீட்டில் நடந்த சோகம்!

முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிக் பாஸ் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அனிதா சம்பத் பிரபலமானார்.

 

பிக் பாஸ் வீட்டில் சுமார் 80 நாட்கள் இருந்த அனிதா சம்பத், கடந்த வாரம் ரசிகர்களிடம் குறைவான வாக்குகள் பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

 

இந்த நிலையில், அனிதா சம்பத்தின் தந்தை பிரபல பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் மரணம் அடைந்துள்ளார். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கும் ஆர்.சி.சம்பத், பல பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றியுள்ளார்.

 

சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ஆர்.சி.சம்பத்துக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

Big Boss Anitha Sampath father RC Sampath

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா வந்தவுடன், அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் அவரை மட்டும் இன்றி பிக் பாஸ் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.