Feb 10, 2021 04:20 PM
சம்பத்ராமின் 200 வது படம் ‘கசகசா’! - பிப்ரவரி 12 ஆம் தேதி ஒடிடியில் ரிலீஸாகிறது

அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சம்பத்ராம், வில்லன், குணச்சித்திர வேடம் என்று கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் அவருடைய 200 வது படமான ‘கசகசா’ வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி எம்.எக்ஸ் பிளேயர், ஹங்காமா ஆகிய ஒடிடி தளங்களில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் டாக்டர்.தமிழ் சுடர் இயக்கியுள்ள ‘கசகசா’ திரைப்படத்தின் டிரைலரை இன்று இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு, டிரைலரை பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இத்திரைப்படத்தில் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் சம்பத்ராம் நடித்திருப்பதோடு, படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.