Nov 18, 2019 12:57 PM

கன்னட சினிமாவில் களம் இறங்கும் சமுத்திரக்கனி!

கன்னட சினிமாவில் களம் இறங்கும் சமுத்திரக்கனி!

இயக்குநர் சமுத்திரக்கனி, தற்போது பிஸியான நடிகராக இருக்கிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், அப்பா என்று அனைத்து வேடங்களிலும் நடித்து வருபவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

தற்போது ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சமுத்திரக்கனி, கன்னட சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகிறார்.

 

கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோ உபேந்திரா நடிக்கும் புதிய படமான ‘கப்சா’ படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார். இப்படம் கன்னடம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் உருவாகிறது. இதில், ஏழு மாநில சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்கள் வில்லன்களாக நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இருந்து சமுத்திரக்கனி நடிக்கிறார்.

 

Upendra

 

உபேந்திராவின் நடிப்பில் வெற்றி பெற்ற ‘பிரம்மா’, ‘ஐ லவ் யு’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.சந்துரு இயக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.