Feb 16, 2021 04:59 AM

பிக் பாஸ் சனம் ஷெட்டியின் புது காதலர்! - யார் தெரியுமா?

பிக் பாஸ் சனம் ஷெட்டியின் புது காதலர்! - யார் தெரியுமா?

பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி, பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமான மாடல் தர்ஷனை காதலித்ததும், அவர்களது காதல் நிச்சயம் வரை சென்ற நிலையில், தர்ஷன் திடீரென்று சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததும் அனைவரும் அறிந்தது தான்.

 

தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்த சனம் ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் தோல்வி குறித்து பேசுவார், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அவர் தர்ஷன் குறித்து எங்குமே பேசவில்லை.

 

இதற்கிடையே, தர்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட, ஷெனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோசியல் மீடியாவில் பதிவுகள் வெளியிடுவதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது புதிய காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடியதோடு, அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

ஆனால், தனது காதலர் யார்? என்பதை மட்டும் சொல்லாதவர், காதலரின் புகைபடத்தையும் வெளியிடாமல், தனது கையை ஆண் ஒருவர் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.