Dec 20, 2020 05:08 AM

மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை புதிய பரிமானத்துடன் கொடுக்கும் ’Carvaan Lounge Tamil’

மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை புதிய பரிமானத்துடன் கொடுக்கும் ’Carvaan Lounge Tamil’

சரீகமா மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஒரு நவீன இசை விருந்து ’Carvaan Lounge Tamil’. இந்த தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர்.

 

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நம்ம ஊரு சிங்காரி...” பாடலை தனது இசையாலும், குரலாலும் நவீன மயமாக்கியுள்ளார். இந்த பாடலின் வீடியோ பதிப்பு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இதுபோல் மேலும் 6 பாடல்கள் இந்த இசை தொகுப்பில் வெளியாகியுள்ளது.

 

இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி.சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோரும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, பாடகர் கார்த்திக் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

 

பிரபல பாடகர்கள் சின்மயீ, சைந்தவி, தன்வீஷா, விஜய் பிரகாஷ், சத்திய பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன், சூரஜ் சந்தோஷ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் வீடியோ வடிவில் விரைவில் வெளியாக உள்ளது.

 

Vijay Antony

 

 

இந்த இசை தொகுப்பு குறித்து அமேசான் பிரைம் மியூசிக் நிறுவனத்தின் இயக்குநர் ஷாஹஸ் மல்கோத்ரா கூறுகையில், “பழைய பாடல்களின் மறுபதிவு (ரெட்ரோ) பிரைம் மியூசிக் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான இசை வகை ஆகும். Saregama வுடன் நாங்கள் முதலில் இணைந்த ’Caarvan  Lounge  Season 1’ மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய சிறந்த சமகால தமிழ் பாடகர்களால் மீண்டும் உருவாக்கப்பட்ட அற்புதமான பாடல்களுடன் தமிழ் இசை ஆர்வலர்களை மகிழ்விக்க இம்முறை Saregama வுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சியின் மூலம், ரெட்ரோ இசை ரசிகர்கள் பாடல்களை விளம்பரமில்லாமலும், பிரத்தியேகமாகவும், முதலில் பிரைமில் காணலாம்.” என்றார்.

 

சரீகமா நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் ரஷ்னா பொக்கன்வாலா கூறுகையில், “கடந்த ஆண்டு நாங்கள் அமேசான் பிரைம் மியூசிக் உடன் இணைந்த ’Carvaan Lounge Hindi’- யைத் தொடர்ந்து ‘Carvaan Lounge Tamil’ என்பது அமேசான் பிரைம் மியூசிக் உடனான எங்கள் இரண்டாவது நிகழ்ச்சி ஆகும். Saregama வில் உள்ள எண்ணற்ற தமிழ் பாடல்களும், அதனை புதிய விதமாக வெளிக்கொண்டுவர தமிழில் பல்வேறு திறமையான கலைஞர்கள் இருப்பதாலும், இது மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழ் இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அருமையான பழைய பாடல்களைத் தேர்வு செய்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் மறுபதிவு ஒரு தனித்துவமான இசைக் கருவியின் ஒலியைக் கொண்டிருக்கின்றன, இது அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்பது உறுதி. இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்த Amazon Prime Music ஐ விட சிறந்த றுவனம் இருக்க இயலாது.” என்றார்.

 

அமேசான் பிரைம் மியூசிக் பற்றி:

 

அமேசான் பிரைம் மியூசிக் 70 மில்லியன் பாடல்களையும் நூற்றுக்கணக்கான க்யூரேட்டட் பிளேலிஸ்ட்கள் மற்றும் நிலையங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதின் மூலம் இசை கேட்பதை மறுவடிவமைக்கிறது. அமேசான் பிரைம் மியூசிக் iOS மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள், டெஸ்க்டாப், ஃபயர் டிவி ஸ்டிக், எக்கோ மற்றும் பலவற்றில் புதிய வெளியீடுகள் மற்றும் தரமான பழைய வெளியீடுகளையும் வரம்பற்ற, ad-free அணுகலை வழங்குகிறது. அமேசான் பிரைம் மியூசிக் மூலம், பிரதம உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 999 ரூபாய் உறுப்பினர் சந்தா மற்றும் மாதாந்திர ரூ.129-க்கு கூடுதல் செலவில்லாமல் விளம்பரமில்லாமால் கேட்பதை நன்மையாக அணுகலாம். அமேசான் பிரைம் மியூசிக் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பல இந்திய மொழிகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் முக்கிய சர்வதேச மற்றும் இந்திய இசை லேபிள்களில் 70 மில்லியன் பாடல்களை உள்ளடக்கியது. இதைவிட இசையுடன் ஈடுபடுவது ஒருபோதும் இயல்பான, எளிமையான மற்றும் வேடிக்கையானதாக இருந்ததில்லை. 

 

மேலும் தகவலுக்கு, www.amazon.in/amazonprimemusic ஆப் ஐ பார்வையிடவும் அல்லது அமேசான் பிரைம் மியூசிக் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்