Feb 20, 2021 03:58 AM

சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! - கோலிவுட்டில் தொடரும் சோகம்! -

சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! - கோலிவுட்டில் தொடரும் சோகம்! -

சீரியல் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சோகம் மறைவதற்குள் இன்னொரு சீரியல் நடிகர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் இந்திரகுமார். இலங்கை தமிழரான இவர், நேற்று முன் தின இரவு தனது நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்றுள்ளார்.

 

பிறகு தனது நண்பரின் அறையிலேயே தங்கிய இந்திரகுமார், காலையில் அதே அறையில் தூக்குப் போட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

 

Indhrakumar

 

இந்திரகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.