Jul 14, 2020 10:59 AM

”உங்கள விட உங்க அம்மாது தான்...” - ஷிவாணியை அதிர்ச்சியாக்கிய சம்பவம்

”உங்கள விட உங்க அம்மாது தான்...” - ஷிவாணியை அதிர்ச்சியாக்கிய சம்பவம்

மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஷிவாணியும் ஒருவர். இளசுகளின் பேவரைட் சீரியல் நடிகையாக சமீபத்தில் டிரெண்டாகியிருக்கும் ஷிவாணி, தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே இளசுகளின் மனதில் நுழைந்து விட்டார். இவரது புகைப்படங்களுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர இருந்தாலும், அம்மணி புகைப்படங்கள் வெளியிடுவதை மட்டும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்.

 

‘பகல் நிலவு’ என்ற சீரியலில் நடித்து பிரபலமான ஷிவாணி, அதன் பிறகு நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற சீரியலில் இருந்து திடீரென்று வெளியேறியதோடு, தன்னை வேண்டா வெறுப்பாக நடிக்க வைத்ததனால தான் வெளியேறினேன், என்றும் கூறினார். தற்போது ‘இரட்டை ரோஜா’ என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் ஷிவாணி, சினிமாவின் நடிக்க வாய்ப்பு தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்காகவே கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், ஷிவாணியை பெரும் அதிர்ச்சியடைய சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதாவது, ஷிவாணியின் அம்மா அகிலா நாராயணன், தனது மகளைப் போலவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, தனது செல்பி புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்ட் வருகிறார். பார்ப்பதற்கு இளமையாக இருக்கும் அகிலாவின் புகைப்படங்களும் அவ்வபோது வைரலாகி வருகிறது.

 

இதற்கிடையே, ஷிவாணியின் ரசிகர்கள் ஒருவர், “உங்களை விட உங்க அம்மா போடும் போஸ்ட் தான் நல்லா இருக்கு” என்று கமெண்ட் தெரிவித்திருப்பதோடு, மீம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த மீமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஷிவாணி, ரசிகரின் இத்தகைய கமெண்டால் அதிர்ச்சியடைந்தாலும், அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

Shivani mother meme