Feb 19, 2021 03:58 AM

சித்ரா வழக்கில் வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்! - கண்ணீர் விட்டு அழும் பெற்றோர்

சித்ரா வழக்கில் வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்! - கண்ணீர் விட்டு அழும் பெற்றோர்

தொலைக்காட்சி தொகுப்பாளி மற்றும் சீரியல் நடிகையான சித்ரா, தற்கொலை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய மரணம் தொடர்பான மரணங்கள் தற்போதும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

 

சித்ராவுக்கு மது பழக்கம் மற்றும் கச்சா பழக்கம் இருப்பதாகவும், அவருடைய ஹேண்ட் பேக்கில் அதற்கான ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக கூறப்பட்டது. ஆனால், இதை அவருடைய அம்மா மருத்தார்.

 

மேலும், சித்ராவுக்கு ஏற்கனவே சில காதல்கள் இருந்ததாக குற்றம் சாட்டிய அவருடைய மாமனார், சித்ராவுக்கு அரசியல்வாதி ஒருவரிடம் இருந்து அடிக்கடி மிரட்டல் வந்ததாக தான் அறிந்தேன், என்றும் கூறினார்.

 

இப்படி சித்ரா மரணத்தில் தொடர்ந்து பல சர்ச்சையான தகவல்களும், குற்றச்சாட்டுகளும் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அவருடைய அம்மா தெரிவித்துள்ளார்.

 

சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும், அவர் தற்கொலை செய்துக்கொள்ள அவருடைய கணவர் கொடுத்த தொல்லைகள் தான் காரணம், என்று காவல்துறை அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும், இதுவரை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையை அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லையாம்.

 

மேலும், சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட போது வெளிநாட்டு பணம், வைர கம்பல், வைர வலையல்கள் அணிந்திருந்தாராம். ஆனால், அவை எதையும் காவல்துறை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல், அப்படிப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை, என்றும் கூறிவிட்டார்களாம்.

 

இது குறித்து யுடியுப் சேனல் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்துள்ள சித்ராவின் அம்மா, சித்ரா வங்கி கணக்கில் லட்சக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பவர், ”என் மகளை இப்படி செய்து, எங்களையும் இப்படி அலைய விடுகிறார்கள், நாங்க என்னதான் செய்யப் போகிறோமோ” என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.