கோலிவுட்டில் பரபரப்பு - நயன்தாரா மற்றும் சிம்புவின் காதலர் தின அப்டேட்

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலிக்கும் சினிமா நடிகர், நடிகைகள் தங்களது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த, சிலர் சமூக சேவை மூலமும் காதலர் தினத்தை கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், முன்னாள் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா காதலர் தின அப்டேட்டால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நயன்தாராவின் தற்போதைய காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “ஐ லவ்யூ தங்கமே” என்று தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். விக்கி பட்டு வேஷ்ட்டி, சட்டையிலும், நயன் பட்டு புடவையிலும் இந்தது தான் இந்த புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.
இப்படி நயனின் காதலர் தின அப்டேட் வைரலான நிலையில், சிம்புவின் நாய் புலம்பலும் பெரும் வைரலாகி வருகிறது.
காதலர் தினத்தன்று தனது நாய் கோகோவுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ள சிம்பு, “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது. என் கஷ்டம் உனக்கு புரியுதா? தங்கம் என்னமா அப்படி பாக்குற. எனக்கு கல்யாணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” என்று நாயிடம் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.