Apr 13, 2020 07:44 AM

ஆபத்தான சூழலில் சிக்கிய மகன்! - சோகத்தில் நடிகர் விஜய்

ஆபத்தான சூழலில் சிக்கிய மகன்! - சோகத்தில் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் இன்றி வசூல் மன்னனாக திகழும் நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ படக் கொரோனா பாதிப்பால் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் என்பவர் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த பிரச்சினை விஜய்க்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கும் நிலையில், அவரது மகன் தற்போது ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதால் பெரும் கவலையில் இருக்கிறாராம்.

 

கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருக்கிறார். அதே சமயம், அவரது மகன் ஐரோப்பிய நாடு ஒன்றில் படித்து வருகிறார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் வெளிநாட்டில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினாலும், விஜயின் மகன் சஞ்சய் இந்தியாவுக்கு திரும்பவில்லையாம்.

 

Vijay Son Sanjay

 

தற்போது, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு மிக தீவிரமடைந்திருப்பதால், தனது மகன் போதிய பாதுகாப்புடன் இருக்கிறாரா, என்று நடிகர் விஜய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். 

 

அதே சமயம், தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அரசின் உதவியையும் நாட முடியாத சூழலில் விஜய் இருப்பதால், அவரது குடும்பமே சஞ்சயின் நிலையை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.