May 21, 2019 06:27 AM

தென்னிந்திய அளவிலான பட்டியல்! - விஜய்க்கு 2ம் இடம், அஜித்துக்கு நோ இடம்!

தென்னிந்திய அளவிலான பட்டியல்! - விஜய்க்கு 2ம் இடம், அஜித்துக்கு நோ இடம்!

திரைப்பட நடிகர், நடிகைகள் சினிமாத் துறையையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருவதால், பெரிய அளவில் கவனிக்கப்படுகிறார்கள். அதிலும், மத்திய அரசை விமர்சனம் செய்து பல படங்களில் வசனம் இருப்பதாலும், மாநில மொழித் திரைப்படங்களும், அதன் நடிகர், நடிகைகளும் தேசிய அளவில் கவனிக்கப்படுகிறார்கள்.

 

அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி, விஜய் போன்றவர்கள் இந்திய அளவில் பிரபலமாக இருப்பதோடு அவர்களது படங்களும் இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

 

இந்த நிலையில், TRA என்று அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி TRA’s Most Trusted Personalities - 2019 என்ற அறிக்கையை வெளியீட்டுள்ளது. அதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

அதில் தென்னிந்தியாவில் ரஜினி முதலிடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். மற்ற முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா ஆகியோரது பெயர்கள் பட்டியலிலேயே இடம் பிடிக்கவில்லை.

 

இந்திய அளவில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும், அமீர் கான், சல்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

 

முழு ரேங்க் பட்டியல் இதோ,

 

Actor List