Jul 06, 2018 05:58 PM
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மகள் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே அவரது அம்மா ஸ்ரீதேவி, மரணம் அடைந்தது ஒட்டு மொத்த திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும், ஜான்வியின் முதல் இந்தி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஜான்வி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், சிம்புக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஜான்வியை ஹீரோயினாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.