Feb 26, 2018 12:28 PM

ஸ்ரீதேவி மரணத்தில் புதிய சர்ச்சை - பரபரப்பில் பாலிவுட்!

ஸ்ரீதேவி மரணத்தில் புதிய சர்ச்சை - பரபரப்பில் பாலிவுட்!

நேற்று முன் தினம் துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்னம் இந்தியாவுக்கு வரவில்லை. இன்று அவருக்கு மும்பையில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஏராளமான நடிகர் நடிகைகள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். ரஜினிகாந்த் நேற்று இரவே மும்பை சென்றார். கமல்ஹாசன் இன்று 3 மணிக்கு புறப்பட்டார்.

 

இதற்கிடையே, ஸ்ரீதேவின் உடல் இன்று நள்ளிரவு வரக்கூடம் என்பதால் அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தகவல் கூறுகின்றன.

 

ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தார் கூறிவந்த நிலையில், அவரது உறவினர் சஞ்சய் கபூர், அவர் அழகுக்காக செய்துக் கொண்ட அறுவை சிகிச்சைய்யால் தான் உயிரிழந்தார் என்று கூறினார். 

 

இந்த நிலையில் ஸ்ரீதேவி மது போதையினால் தான் பாத்ரூமில் விழுந்து உயிரிழந்ததாக துபாய் அரசு மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும், மது போதையில் குளிக்க சென்ற ஸ்ரீதேவி பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

 

மொத்தத்தில், அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.