Dec 18, 2020 05:02 AM

ஸ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் சைக்கோ கிரைம் திரில்லர் படம்

ஸ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் சைக்கோ கிரைம் திரில்லர் படம்

‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜுவி’ திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றியும், ஸ்ரீகாந்தும் இணைந்து நடிக்கும் படம் ‘தீங்கிரை’. சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கும் இப்படம் சைக்கோ கிரைம் திரில்லராக உருவாகிறது. இதில் ஹீரோயினாக அபூர்வா ராவ் நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

 

சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

 

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். நிர்வாக தயாரிப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோல் கே.எஸ். ஷங்கர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.