Jun 26, 2018 06:56 PM
சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய இலங்கை நிறுவனம்!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சீமராஜா’, இதில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, கெளரவ வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
வில்லியாக சிம்ரன் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்திருக்கிறார். இவர்களுடன்
சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, படக்குழுவினர் ஒன்று சேர்ந்து பேர்வல் பார்ட்டி கொண்டாடினார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை பிரபல சிங்கள நிறுவனமான நாஸ் லங்கா ஹோல்டிங் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.