Apr 17, 2019 06:05 AM

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பூஜா! - நடிகரை மணந்தார்

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பூஜா! - நடிகரை மணந்தார்

தமிழில் பிரபலமான இசை தொலைக்காட்சி ஒன்றில் பிரபல தொகுப்பாளியினாக பணியாற்றியவர் பூஜா. தன்னுடன் பணியாற்றிய தொகுப்பாளர் கிரேக் என்பவரை பல ஆண்டுகளாக பூஜா காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

 

சில காலம் சந்தோஷமாக வாழ்ந்த இந்த காதல் தம்பதிக்கு இடையே திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.

 

Pooja and Graig

 

விவாகரத்துக்கு பிறகு நடிப்பதில் தீவிரம் காட்டிய பூஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு அவருக்கு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக பூஜா உருவெடுத்தார்.

 

இந்த நிலையில், நடிகை பூஜா, நடிகர் ஜான் கொக்கைன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

 

Pooja Marriage to John

 

 ‘கே.ஜி.எப்’ படத்தில் ஜான் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜான் கொக்கைனும், பூஜாவுடன் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

 

இதோ அவர்களது திருமண புகைப்படம்,