Apr 19, 2019 12:19 PM

விஜயின் 63 வது படத்திற்கு தடை? - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இயக்குநர்

விஜயின் 63 வது படத்திற்கு தடை? - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இயக்குநர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அப்படம் ரிலிஸூக்கு முன்பு கதை திருட்டு விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. பிறகு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய பஞ்சாயத்தில், சம்மந்தப்பட்ட உதவி இயக்குநருக்கு பெரும் தொகை ஒன்று இழப்பீடாக வழங்கப்பட்டதோடு, அவரது பெயரும் படத்தின் டைலில் கார்டில் போடப்பட்டது.

 

இதற்கிடையே, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63 வது படமும் தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விளையாட்டுத் துறையில் நடைபெறும் ஊழலை பற்றி படம் பேசுவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, என்பவர் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதோடு, படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நன் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனங்களில் கூறினேன். தற்போது அட்லீ இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே படத்தின் படப்பிடிப்பு தடை விதிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

 

23 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ள இந்த வழக்கு குறித்து விளக்கம் கேட்டு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது.