Feb 08, 2021 05:21 PM

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி!

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி!

‘100’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். 

 

பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீகாந்த் நடிப்பில், சமீபத்தில் ஒடிடி-யில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘மாறா’ படத்தை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுருதி நல்லாப்பா, பிரதீக் சக்தவர்த்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையப்படுத்திய ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் சிறப்பு அக்‌ஷன் காட்சிகளுக்காக நடிகர் அதர்வா முரளி, சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

பாலிவுட்டில் 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்திருக்கும் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இப்படம், இணையவழி குற்றங்களின் (Dark Web) பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகிறது.

 

மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி, நகைச்சுவை காட்சிகள் நிறைந்த படமாகவும் உருவாகும் இப்படத்தின் இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.