May 05, 2020 03:41 PM

மீண்டும் வந்த சுச்சி லீக் சுசித்ரா! - முன்னணி நடிகர் பற்றி ஓபன் டாக்

மீண்டும் வந்த சுச்சி லீக் சுசித்ரா! - முன்னணி நடிகர் பற்றி ஓபன் டாக்

பிரபல பாடகியும், நடிகையுமான சுசித்ராவின் சமூக வலைதளப் பக்கத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பற்றிய அந்தரங்க தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து சுச்சி லீக் என்ற பெயரும், அதில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் தகவல் வைரலாகியது.

 

பிறகு, சுசித்ராவின் சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சுசித்ரா தான் அதை செய்ததாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு சுசித்ரா லண்டன் சென்றதோடு, சுச்சி லீக் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது.

 

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ரா காணாமல் போய்விட்டதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்பட்டது. பிறகு அது தொடர்பாகவே அவரே விளக்கம் கொடுத்தார்.

 

இந்த நிலையில், சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது முதல் கிரஷ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், தளபதி விஜய் தான் தனது முதல் கிரஷ் என்று கூறியிருக்கிறார்.

 

Actor Vijay

 

மேலும், சுச்சி லீக் பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்காக லண்டனில் ஒரு வருடம் இருந்த அவர், அப்போது அங்கே சமையல் வகுப்புகளுக்கு சென்றாராம். தற்போது அதை வைத்து புது புது வகையான உணவுகளை சமைத்து அதை தனது யுடியுப் சேனலில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.