May 21, 2019 02:11 PM

இயக்குநரிடம் அடிவாங்கிய ’சூப்பர் டீலக்ஸ்’ அற்புதம்! - எதற்கு தெரியுமா?

இயக்குநரிடம் அடிவாங்கிய ’சூப்பர் டீலக்ஸ்’ அற்புதம்! - எதற்கு தெரியுமா?

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தி அதை விட மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. வித்தியாசமான கெடப்பில் நடிக்கிறேன் என்ற பெயரில் விஜய் சேதுபதிக்கு கெட்டப் பெயர் வாங்கிக் கொடுத்தட் இப்படம், அற்புதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு மட்டுமே நல்ல நடிகர் பெயரை வாங்கிக் கொடுத்தது.

 

’சூப்பர் டீலக்ஸ்’ படமே பலருக்கு பிடிக்காத நிலையில், அனைவருக்கும் அப்படத்தில் பிடித்த விஷயமாக அமைந்தது, மிஷ்கினுடன் வரும் அற்புதம் என்ற கதாபாத்திரமும், அவரது டயால் டெலிவரியும் தான். “நானே சாட்சி” என்ற ஒற்றை வசனம் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த அற்புதம், விசசகப்பட்டினத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் இவரை ‘சூப்பர் டீலக்ஸ்’ அடையாளம் காட்டியிருக்கிறது.

 

மேலும், பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்று வரும் அற்புதம், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார்.

 

தற்போது தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பாடல்கள் எழுதுவது, பாடுவது மற்றும் பின்னணி குரல் கொடுப்பது ஆகிய பணிகளை செய்து வருபவர், நடிப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியவர், அதில் பணத்தை இழந்ததால், தனது அம்மாவை 10 வருடங்களாக பார்க்காமல் இருக்கிறாராம்.

 

கல்யாணம் செய்துக்கொள்ளாமல் சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துவிட்டதாக கூறும் அற்புதம், வில்லனாக நடிப்பதில் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம். காரணம், மேடை நாடகங்களில் அவருக்கு அயோக்யன் வேடங்கள் தான் கிடைக்குமாம்.

 

இது குறித்து இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அற்புதம், ‘சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பின் போது, இயக்குநர் மிஷ்கினின் கழுத்தை பிடித்து தள்ளுவது போன்ற காட்சியில், அவரை சரியாக தள்ளாத காரணத்தால் இயக்குநர் தியாகராஜன் குமரராஜா அடித்து விட்டாராம். பிறகு மிஷ்கின் அவரை தடுத்து, அடிக்காதே அவர் நல்லா செய்வார், என்று கூறினாராம்.

 

Super Deluxe Arputham

 

மேலும், ”நான் இயக்கும் படத்தில் பெண்ணை கதற கதற கற்பழிக்கும் வேடம் ஒன்று உனக்கு கொடுக்கிறேன்” என்று மிஷ்கின் கூற, அதற்கு அற்புதம் “கொடுங்கய்யா நான் நல்லா செய்வேன்” என்று சொன்னாராம். உடனே மிஷ்கின், “நீ அதை நல்லா தான் செய்வ, உன்ன பாத்தாலே தெரியுது” என்றாராம்.