Jun 25, 2018 06:28 PM

சூர்யாவின் 37 வது படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது

சூர்யாவின் 37 வது படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘சூர்யா 37’ என்று அழைக்கின்றனர்.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார். முக்கிய மோகன் லால், அல்லு சிரிஷ், இயக்குநர் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க, கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சூர்யா, சாயிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

 

Surya 37 pooja

 

பயணம் சம்மந்தமான கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.