Jul 13, 2020 11:16 AM

சூர்யாவின் பிறந்தநாளை உலகளவில் எடுத்துச் செல்லும் ரசிகர்கள்!

சூர்யாவின் பிறந்தநாளை உலகளவில் எடுத்துச் செல்லும் ரசிகர்கள்!

அபிமான நடிகரின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவதோடு, உலக அளவில் எடுத்துச் செல்லும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு சமூக வலைதலங்கள் பெரிதும் பயன்படுகிறது. அந்த வகையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதோடு, உலக அளவில் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

நடிப்பில் கவனம் செலுத்துவதோடு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சூயாவுக்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளை உலகம் முழுவவதும் தெரியப்படுத்துவதோடு, உலக தமிழகர்கள் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

அந்த வகையில், சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட வைத்து அதை உலக அளவில் டிரெண்டாக்கியுள்ளனர்.

 

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.