Apr 23, 2019 08:16 AM

அஜித் இயக்குநருடன் கைகோர்த்த சூர்யா!

அஜித் இயக்குநருடன் கைகோர்த்த சூர்யா!

சூர்யா, முதல் முறையாக நடித்திருக்கும் அரசியல் படமான ‘என்.ஜி.கே’ வரும் மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

தற்போது, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

 

Director Siva

 

சூர்யாவின் 39 வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.