Apr 13, 2019 03:12 PM

சூர்யாவின் புது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சூர்யாவின் புது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ வரும் மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தற்போது அப்படமும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்த நிலையில், சூர்யாவின் 38 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

படத்திற்கு ’சூரரைப் போற்று’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ வீரராக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதிஷ் சூர்யா படத்தொகுப்பு செய்ய, ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார்.

 

Soorarai Potru First Look

 

சூர்யாவின் நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.