Mar 18, 2019 07:37 AM

வில்லி அவதாரம் எடுக்கும் தமன்னா!

வில்லி அவதாரம் எடுக்கும் தமன்னா!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் பலர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்காக, தங்களது சம்பளத் தொகையை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

 

நயன்தாரா ஏற்படுத்திய இந்த ரூட்டில் அமலா பால், திரிஷா, ஹன்சிகா என்று பலர் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது தமன்னாவும் இணைந்துள்ளார். ஹீரோயின்களுடன் டூயட் பாடுவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘தேவி 2’ போன்ற படங்களிலும் தமன்னா நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், புதிதாக வில்லி அவதாரத்தையும் தமன்னா ஒரு படத்தில் எடுக்க இருக்கிறார். ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரமாம். சவாலானா வேடமான இதில் நடிக்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுப்பெற வேண்டுமென்பதற்காக தமன்னா சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.