May 06, 2020 07:19 AM

படுக்கையறை காட்சிகளில் நடிக்க தனி சம்பளம்! - தமிழ் நடிகையின் அதிரடி

படுக்கையறை காட்சிகளில் நடிக்க தனி சம்பளம்! - தமிழ் நடிகையின் அதிரடி

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வரும் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதற்கு ஒரு தொகை, புதுமுக நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒரு தொகை மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு என்று ஒரு தொகை, என்று சம்பளம் வாங்குவதில் பல வகைகளை கையாளும் நயன்தாரா, கதை பிடித்திருப்பதோடு, தனது கதாப்பாத்திரம் பேசப்படும் விதத்தில் இருந்தால், சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் செய்கிறாராம்.

 

அதிகம் சம்பளம் வாங்கும் நயன்தாராவே கடைபிடிக்காத ஒரு வழிமுறையை, பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே, கடைபிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2012 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில் வாய்ப்பு கிடைத்ததோடு, அங்கு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியும் பெற்றது. இதனால், தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.

 

தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹேக்டே கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பதால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதோடு, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் அவரை கோடம்பாக்கத்திற்கு அழைத்து வர முயற்சித்து வருகிறார்களாம்.

 

இந்த நிலையில், இனி கவர்ச்சியாக நடிக்க வேண்டும் மற்றும் ஹீரோக்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும், என்று பூஜா ஹெக்டே புது கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

 

Pooja Hedge

 

இந்த கண்டிஷனால் அவரை தங்களது படங்களில் ஹீரோயினாக்குவதற்காக ஆர்வம் காட்டி வந்த தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியில் பின் வாங்கினாலும், சில ஹீரோக்கள் மட்டும் பூஜா ஹெக்டே தான் வேண்டும், என்று அடம்பிடிக்கிறார்களாம்.