Apr 16, 2019 10:27 AM
சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் 5 முன்னணி ஹீரோக்கள்! - எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ரவிக்குமார், மித்ரன், ராஜேஷ், விக்னேஷ் சிவன் என ஒரே நேரத்தில் பல இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக உள்ள ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் என 5 பேர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும், இயக்குநர் ராஜேஷ் படத்தில் நடித்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, மே 1 ஆம் தேதி படத்தை வெளியிடுகிறது.