Mar 18, 2019 05:54 PM

’தளபதி 63’ பாடல் காட்சி லீக்! - வைரலாகும் வீடியோ

’தளபதி 63’ பாடல் காட்சி லீக்! - வைரலாகும் வீடியோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63 வது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால், இப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். அநேகமாக விஜயின் பிறந்தநாளன்று படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், அத்தகைய வீடியோக்கள் ஒன்று கூட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவைகளாக இல்லை.

 

இந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் நடனம் ஆடுவது தெளிவாக தெரிகிறது. தற்போது தளபதி 63 படத்தின் பாடல்கள் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படப்பிடிப்பு தள வீடியோ வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ,