Nov 10, 2019 03:22 AM

’தளபதி 64’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

’தளபதி 64’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் விஜயின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.

 

விஜயின் ஆரம்பகால திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த இவர்கள், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.