May 22, 2019 06:53 AM

‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்!

‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்!

விஜயின் 63 வது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், விஜயின் 64 படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகரான் இயக்கும் படத்தில் தான் விஜய் அடுத்ததாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது விஜய் ஓகே சொன்ன கதைக்கு முழு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், படத்தின் ஹீரோயின் குறித்து இப்போதே பேச தொடங்கிவிட்டார்கள். வழக்கமான சமந்தா, கீர்த்தி சுரேஷ் என்று பழைய ஜோடி இல்லாமல், இந்த முறை புதிதாக ஒரு நடிகையை விஜய்க்கு ஜோடியாக்க படக்குழுவு முடிவு செய்திருக்கிறாராம். அந்த புது ஜோடி அநேகமாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகையான ரஷ்மிகா மந்தனாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Actress Rashmika Mandana

 

ஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜயுடன் நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை, என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.