Nov 14, 2019 05:16 AM

’தளபதி 64’ படத்தின் கதை லீக்!

’தளபதி 64’ படத்தின் கதை லீக்!

‘பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘தளபதி 64’ என்று வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, பேட்ட படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால், அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா, என்பது இதுவரை தெரியவில்லை. மேலும், சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்க்கீஸ், விஜே ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மேலும், படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கல்லூரிகளில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதை கல்வித்துறை சம்மந்தமானது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

 

அத்துடன், நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவை மையப்படுத்தியும் கதை எழுதப்பட்டிருப்பதாகவும், இன்றைய கல்விமுறையை விமர்சனம் செய்யும் விதமாக திரைக்கதை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.