இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’!

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தமிழரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, கஸ்தூரி, ராதாரவி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஷ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதியுள்ளார்கள். அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்க, பிருந்தா, சதீஷ் ஆகியோர் நடம் அமைக்கின்றனர்.
ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அத்துடன், படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட உள்ளது.