Apr 13, 2024 06:21 AM

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் ‘தண்டுபாளையம்’!

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் ‘தண்டுபாளையம்’!

1982 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடைய கொடூரமான குற்றேஅ பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் ‘தண்டுபாளையம்’.

 

வெங்கட் மூவிஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து இயக்கும் டைகர் வெங்கட், காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் 

முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர், மக்ரதேஷ் பாண்டே , ரவிகாலே, ராயல் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜித்தின் ரோஷன் இசையமைத்திருக்கிறார். பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் டைகர் வெங்கட், கே.டி.நாயக் உடன் இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான டைகர் வெங்கட் கூறுகையில், “கொடூரமான பல குற்றங்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்த இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கும்பலை 15 ஆண்டுகளுக்கு  பிறகு காவல்துறை கைது செய்தது. இதில், 390 கொள்ளை வழக்குகள், 108 கொலை வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டது. குற்றங்களை விசாரித்த நீதிமன்றம் ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை விதித்தது. இப்படி ஒரு தீர்ப்பு இதுவே முதல் முறையாகும். ஆனால், இதுவரை ஒருவருக்கு கூட தூக்குத்தண்டனை வழங்க முடியவில்லை.

 

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளானார்கள். இவ்வாறு இந்த கும்பல் கைதான அத்தனை வழக்குகளிளும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள். எனினும் இவர்களுக்கு இன்னும் பத்து வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் எழுத படிக்க தெரியாத தினக்கூலியாளர்கள்.

 

இப்படி வெளியே தெரியாத பல உண்மை சம்பவங்களை கதையின் அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘தண்டுபாளையம்’” என்றார்.

 

Thandupalayam

 

படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. ”நாட்டுக்கட்ட கூவுதய்யா கொக்கரக்கோ, கண்ணு ரெண்டும் தேடுதய்யா கொக்கரக்கோ...” என்ற அந்த பாடல் கேட்போரை ஆட்டம் போட வைக்கும் சூப்பய் ஹிட் பாடலாக வந்திருக்கிறது.

 

பெங்களூர், கே.ஜி.எஃப், சென்னை, திருச்சி, சித்தூர், கடப்பா, நகரி ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படத்தின் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.