Mar 27, 2019 06:25 AM

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்படும் சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்படும் சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக பலர் போட்டி போட்டு வருகிறார்கள். பெண் இயக்குநர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய், கெளதம் மேனன் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் படமாக எடுத்து வருகிறார்கள்.

 

இதில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வர, முழு படத்தையே முடிக்க கூடிய பட்ஜெட்டே, ஒரு நடிகையின் சம்பளமா!, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.

 

தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படம் முடிந்த பிறகு தலைவி படப்பிடிப்பில் பங்கேற்பாராம்.