May 21, 2019 01:23 PM

நடிகர் சங்க தேர்தலில் திடீர் திருப்பம்! - விஷால் டீமில் ராதிகா?

நடிகர் சங்க தேர்தலில் திடீர் திருப்பம்! - விஷால் டீமில் ராதிகா?

கடந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவி தலைமையிலான அணியை விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. அதையடுத்து பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி நடிகர்கள் சங்க கட்டிடத்தை கட்டி வருகிறது. மேலும், இதனை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்த விஷால் அணியினர், தற்போது தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய தலைவர் நாசர், மீண்டும் தங்களது அணி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அதே சமயம், இந்த முறை விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணிக்கு எதிராக நடிகை ராதிகா தலைமையில் சிம்பு, உதயா உள்ளிட்டவர்கள் அடங்கிய அணி களம் இறங்கப் போவதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், நடிகர்கள் சங்க தேர்தலில் புதிய திருப்பமாக விஷால் அணியில் ராதிகா இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, விஷால், சரத்குமார் மற்றும் ராதிகாவை ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியிருக்கிறாராம். இந்த சந்திப்பு எதற்காக என்பது தெரியாத நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பேசியிருப்பார்களோ, என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் ராதிகா, ”இது எப்போது நடந்தது?” என்று ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.