Nov 18, 2019 01:46 PM

’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமாவளவன்!

’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமாவளவன்!

சமூக வளைதளங்களில் பெண்கள் சிக்கி எப்பேற்பட்ட வகையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற மைய கருத்தை முன்வைத்து ’கருத்துகளை பதிவு செய்’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. 

 

இந்த படத்தினை ’ஜித்தன் 2’ மற்றும் ’1am’ படங்களை  இயக்கிய இயக்குநர் ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார். பழம்பெரும் நடிகரான SSR.ராஜேந்திரன் அவர்களின் பேரன் SSR.ஆர்யன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை உபாசனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்  இணை தயாரிப்பு விநியோகஸ்தர் JSKகோபி மற்றும் இசையமைப்பாளர் கணேஷ்ராகவேந்திரா பின்னணி இசை பரணி என பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.

 

Thirumavalavan in Karuthukkalai Pathivu Sei

 

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருமாவளவன் அவர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். படத்தின் டிரெய்லரை பார்த்த அவர் படக்குழுவையும், இயக்குநர் ராகுலையும் வெகுவாக பாராட்டினர். இம்மாதிரியான படங்கள் தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் தேவை என்றார்.

கடந்த வாரம் இத்திரைப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பப்பட்டது .படத்தை பார்த்த சென்சார் தலைமை அதிகாரி லீலா மீனாட்சி அவர்களும் படத்தின் இயக்குநரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.