Nov 24, 2019 04:45 AM

தர்ஷனின் காதல் முறிவுக்கு காரணம் இது தானாம்!

தர்ஷனின் காதல் முறிவுக்கு காரணம் இது தானாம்!

பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமான தர்ஷன், தற்போது சினிமாவில் ஹீரோவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டியும், தர்ஷனும் காதலித்து வந்தார்கள். தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சனம் ஷெட்டி இந்த காதல் விவகாரம் குறித்து பேட்டிகளில் கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் வைரலானது. அதன் பிறகும், ஷெரீன் மீது தர்ஷனுக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், தர்ஷன் சனம் ஷெட்டியை பிரிய உண்மையான காதல், சனம் ஷெட்டி ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக பழக தொடங்கியது தான் என்று கூறப்படுகிறது.

 

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி, தமிழில் அறிமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். அந்த படத்தை படத்தின் ஹீரோவே தயாரிக்கவும் செய்கிறாராம். அந்த ஹீரோ கம் தயாரிப்பாளருடன் சனம் ஷெட்டி நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறாராம். மேலும், அவர்கள் இணைந்து நடிக்கும் படத்தில் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தமெல்லாம் சனம் ஷெட்டி கொடுத்திருக்கிறாராம்.

 

இந்த விஷயத்தை அறிந்த தர்ஷன், சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டு, தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.