பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்! - நித்யா மேனன் அதிரடி

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், கதைகள் தேர்வில் கண்டிப்பு காட்டுவதோடு, தனது நடிப்பு மூலம் ஹீரோக்களுக்கே சவால் விடுவார். அந்த வகையில், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் நித்யா மேனன், எனது சினிமா வாழ்க்கை காதல் திருமணம் போன்றது அல்ல, காதல் திருமணத்தில் தான் தம்பதிகளுக்கு இடையே உடனே அந்நோன்யம் ஏற்படும்.
எனது சினிமா வாழ்க்கை, பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. அதில் தான், நாளாக தான் தம்பதிகளுக்கு இடையே ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது, என்று தெரிவித்துள்ளார்.