Dec 26, 2020 07:13 AM

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் நான்காவது சீசன் 80 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் ஆரி வெற்றி பெற்று தலைவராக தேர்வு செயப்பட்டுள்ளார். அதே சமயம், வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

ஆரி, கேப்ரியலா, ஷிவானி, ஆஜீத், அனிதா ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளார்கள். இவர்களில் ஒருவர் நாளை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். 

 

இந்த நிலையில், ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போது அனிதா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது. இதுவரை நடைபெற்ற ஓட்டிங்கில் அனிதாவுக்கு தான் மிக குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது. அதே சமயம், இதில் திடீரென்று மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 

எப்படி இருந்தாலும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார்? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.