Feb 17, 2021 09:05 AM

மூன்று ஹீரோக்கள் இணையும் டார்க் ஃபேண்டஸி படம்

மூன்று ஹீரோக்கள் இணையும் டார்க் ஃபேண்டஸி படம்

வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் 'வணக்கம் தமிழா' சாதிக் இசையமைத்து, தயாரித்து இயக்கும் படத்தில் ’கன்னிமாடம்’ ஸ்ரீராம் கார்த்திக், அஜய் வாண்டையார், விஜே பப்பு ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ‘பியார் பிரேமா காதல்’ புகழ் மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பு செய்கிறார்.

 

டார்க் ஃபேண்டஸி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது.