Apr 19, 2019 05:06 PM

’ராங்கி’ யான நடிகை திரிஷா!

’ராங்கி’ யான நடிகை திரிஷா!

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். திரிஷா நடிப்பில் ’கர்ஜனை’, ’சதுரங்கவேட்டை 2’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

 

இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் கதை, வசனத்தில், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் திரைக்கதை இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார், என்பதை ஏற்னவே நாம் பார்த்தோம்.

 

Actress Trisha Latest Photo

 

இந்த நிலையில், இந்த புதிய படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ராங்கி என்றால் திமிர் பிடித்தவள் என்று அர்த்தமாகும். ஆக, திரிஷாவின் வேடம் இந்த படத்தில் அதிரடியான வேடமாக இருக்கும் என்பது டைடிலே சொல்லிவிடுகிறது.

 

Trisha New Photo

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.