Apr 18, 2019 10:26 AM

படப்பிடிப்பு முடிந்து திரும்பிய பிரபல சீரியல் நடிகைகள் இருவர் மரணம்!

படப்பிடிப்பு முடிந்து திரும்பிய பிரபல சீரியல் நடிகைகள் இருவர் மரணம்!

சினிமாவை போல சீரியல்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்க தொடங்கிவிட்டதால், சினிமா நடிகர், நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சில சீரியல்களில் நடித்தாலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிடுகிறது.

 

அந்த வகையில், தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபலமான நடிகைகளாக இருப்பவர்கள் அனுஷா ரெட்டி, பார்கவி. இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிக்ர்கள் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், சாலை விபத்து ஒன்றி சிக்கி அனுஷா ரெட்டியும், பார்கவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Anusha Reddy and Bhargavi

 

ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து இருவரும் ஒரே காரில் வீடு திரும்பியிருக்கிறார்கள். அப்போது இவர்கள் வரும் வழியில் ஒரு லாரி வண்டிருக்கிறது. அதை பார்த்த கார் டிரைவர், காரை ஒரு பக்கமாக திருப்ப, அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.

 

இதில், நடிகைகள் அனுஷா ரெட்டியும், பார்கவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.