Mar 26, 2019 05:08 AM

நயன்தாராவுக்காக களத்தில் இறங்கிய உதயநிதி!

நயன்தாராவுக்காக களத்தில் இறங்கிய உதயநிதி!

‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாராவை இழிவாக பேசியதற்காக பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

 

நயன்தாரா, விவகாரத்தில் திமுக இப்படி உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும், திமுக-வின் இந்த நடவடிக்கை ஆச்சர்யத்தையும் கொடுப்பதாக கூறி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி மீது திமுக எடுத்த உடனடி நடவடிக்கைக்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாக தொலைபேசியில் பேசினாராம். நீங்கள் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுக-வுக்கு நயன்தாரா பிரச்சாரம் செய்வார், என்றும் கூறினாராம்.

 

உடனே, மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பாக உதயநிதி பேசியிருக்கிறார். உதயநிதி பேசியது ஒரு பக்கம் இருக்க, ராதாரவி அதிமுக-வுக்கு தாவுவதற்கு ரெடியாக இருந்த தகவல் ஸ்டாலினுக்கு கிடைத்ததாம், அவரும் சரத்குமார் ஒன்றாக அதிமுக-வுக்கு பிரச்சாரம் செய்யும் முடிவில் இருந்தார்களாம். அதனால், தான் திமுக பணியில் ராதாரவி ஆர்வம் காட்டாமல் இருந்தாராம்.

 

Stalin and Radharavi

 

இந்த தகவலை அறிந்த மு.க.ஸ்டாலின், ராதாரவியே போவதற்கு முன்பு, நயன்தாரா விவகாரத்தை காரணம் காட்டி, நாமே ராதாரவியை நீக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தராம்.