Nov 11, 2019 03:33 AM

’வலிமை’ படப்பிடிப்பு தொடங்குவதில் நீடிக்கும் காலதாமதம்! - காரணம் இவரா?

’வலிமை’ படப்பிடிப்பு தொடங்குவதில் நீடிக்கும் காலதாமதம்! - காரணம் இவரா?

‘விஸ்வாசம்’, நேர்கொண்ட பார்வை’ என இரண்டு தொடர்ந்து இரண்டு பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்திருக்கும் அஜித்தின் அடுத்தப் படமாக ‘வலிமை’ உருவாகிறது. நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை வினோத் இயக்குகிறார்.

 

இப்படத்தில் அஜித் பைக் ரேஸர் மற்றும் போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் மகளாக நடிக்க இருப்பதாகவு மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

 

இதற்கிடையே, அஜித்தின் பல படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகே தலைப்பு வைக்கப்படும் வழக்கம் இருந்த நிலையில், இப்படத்திற்கு ‘வலிமை’ என்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே தலைப்பு வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், தலைப்பு வைத்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை.

 

வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆவதற்கு அஜித் தான் காரணம், என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அஜித், தனது உடலை கட்டுக்கோப்பாக காட்டுவதற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருபவர், அந்த வேடத்தில் தான் கச்சிதமாக பொருந்த வேண்டும், அதற்காக தன்னை முழுமையாக தயார்ப்படுத்திய பிறகே படப்பிடிப்புக்கு வருவேன், என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

 

இதனால் தான் ‘வலிமை’ படப்பிடிப்பு துவங்கவில்லையாம். அஜித் ரெடி என்றால் உடனே படப்பிடிப்பு தொடங்கிவிடுமாம்.