கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கதாநாயகியான வாணி போஜன்!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், தற்போது பெரிய திரையில் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். வாணி போஜன் வெள்ளித்திரையில் அறிமுகமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், கொரோனா பாதிப்பால் புது படங்களில் கமிட் ஆவதை அவ நிறுத்தி வைத்திருக்கிறார்.
இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் கதாநாயகனாக ஜெய் நடித்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் இந்த வெப் சீரிஸை அவரது உதவி இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
திரைப்படத்திற்கு இணையாக 8 எப்பிசோட்களாக உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது.