‘வர்மா’ பட ஹீரோயின் மேகா - Mehaa புகைப்படங்கள்

நீண்ட நாட்களாக நீடித்து வந்த பாலாவின் ‘வர்மா’ பட ஹீரோயின் குழப்பம் இன்று தீர்ந்தது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வர்மா’ படத்திற்காக ஹீரோயின் கிடைக்காமல் இருந்த நிலையில், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா வர்மா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியானது
ஆனால், அது வெறும் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில், வர்மா படத்தின் ஹீரோயின் விபரத்தை இயக்குநர் பாலா புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
பெங்காலி மொழித் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருக்கும் மேகா என்பவர் ‘வர்மா’ பட ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான மேகா நடிப்பில் மட்டும் இன்றி நடனத்திலும் அசத்துவாராம்.
இயக்குநர் பாலா போன்ற ஒரு இயக்குநரின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதை எண்ணி நடிகை மேக பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.