Apr 13, 2019 12:46 PM

ரஜினி படத்தில் விக்னேஷ் சிவன்!

ரஜினி படத்தில் விக்னேஷ் சிவன்!

நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அனிருத்துடன் நெருங்கிய நட்பில் இருக்கும் விக்னேஷ் சிவன், அவரது இசையில் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்த பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகியிருப்பதால், ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் அவருக்கு ஒரு பாட்டு எழுதும் வாய்ப்பை அனிருத் பெற்று தந்திருக்கிறாராம்.

 

சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.